PUBLISHED ON : ஜன 08, 2023

அ நிறம் | அளவு
வீட்டை காவல் காக்க, நாய்களை வளர்ப்பதாக கூறுவர், சிலர். இன்னும் சிலர், செல்லப் பிராணியாக வளர்ப்பதாக கூறுவர்.
ஆனால், கேரளா மாநிலம், திருச்சூரில் உள்ள ஒரு வீட்டில், 'வேலை செய்வதற்காக தான் நாய் வளர்க்கிறோம்...' என்கின்றனர். இதன் உரிமையாளர் சொல்லும் வேலைகளை கச்சிதமாக செய்கிறது.
தென்னை மரத்தில் இருந்து தேங்காய்களை பறித்து போட்டால், அதை சேகரித்து வைப்பதுடன், உரித்தும் தருகிறது. இது தவிர, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, பாத்திரங்களை எடுத்து அடுக்குவது என, பல வேலைகளை செய்ய பழக்கி உள்ளதாக கூறுகின்றனர்.
— ஜோல்னாபையன்
