தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இப்போ எப்படி, காப்பி அடிப்பீங்க!

இப்போ எப்படி, காப்பி அடிப்பீங்க!

இப்போ எப்படி, காப்பி அடிப்பீங்க!


PUBLISHED ON : செப் 29, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாய்லாந்தில் உள்ள கேஸ்டார்ட் பல்கலைக்கழகம், பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள், தேர்வுகளில், அருகில் அமர்ந்துள்ள மாணவர்களை பார்த்து, 'காப்பி' அடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தடுப்பதற்காக, அந்த பல்கலை நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தான், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள், அருகில் அமர்ந்திருப்போரை திரும்பி பார்த்து, காப்பி அடிக்க முடியாதபடி, மாணவர்களின் தலையில், இடது மற்றும் வலது புறங்களில், அட்டைகளை கட்டி தொங்க விட்டு விட்டனர். இந்த புகைப்படம், சமூக வலைத் தளங்களில் வெளியானதால், பல்கலை நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு, கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஆனால், பல்கலை நிர்வாகமோ,'எங்களின் இந்த நடவடிக்கையை, தேர்வு எழுதிய மாணவர்களே, ரசித்து, ஏற்றுக் கொண்டனர். மற்றவர்கள் தான், தேவையின்றி, பிரச்னை எழுப்புகின்றனர். இதை சீரியசாக பார்க்காதீங்க, காமெடியா பாருங்க...' என, அலட்சியமாக பதில் அளித்து, மழுப்புகிறது.

ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us