ஏலத்துக்கு வருகிறது, ஹிட்லரின் மாணிக்க கல் மோதிரம்!
ஏலத்துக்கு வருகிறது, ஹிட்லரின் மாணிக்க கல் மோதிரம்!
PUBLISHED ON : செப் 29, 2013

ஒரு காலத்தில், ஜெர்மனியை மட்டுமல்லாமல், உலக நாடுகளையே குலை நடுங்க வைத்த, சர்வாதிகாரி, ஹிட்லர். கொடுங்கோலர் என, மக்களால், அறியப்பட்ட ஹிட்லர், விதம் விதமான பரிசுப் பொருட்களை வாங்கி குவிப்பதில், ஆர்வம் உள்ளவர். கார்ல் பெர்தோல்ட் என்பவர், ஹிட்லருக்காக பிரத்யேகமாக, நீல நிற மாணிக்க கற்கள் பொருத்தப்பட்ட மோதிரத்தை, வடிவமைத்து கொடுத்துள்ளார்.
ஸ்வஸ்திக் முத்திரை பதிக்கப்பட்ட அந்த மோதிரத்தில், பல லட்சம் மதிப்புள்ள, 12, நீல நிற மாணிக்க கற்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மோதிரத்தை, தன் கடைசி காலம் வரை, பாதுகாத்து வைத்திருந்தார், ஹிட்லர். தற்போது, அந்த மோதிரம், ஒரு ஏல நிறுவனத்திடம் உள்ளது. விரைவில், அந்த மோதிரத்தை ஏலம் விட, முடிவு செய்துள்ளனர். ஹிட்லர், ஆசை ஆசையாக பாதுகாத்து வைத்திருந்த, அந்த மோதிரம், 66 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
— ஜோல்னா பையன்.
