PUBLISHED ON : டிச 20, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'சர்வதேச அளவில் பிரபலமாக வேண்டும் என்றால், வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும்...' என்ற எண்ணம், பலருக்கும் ஏற்பட்டு விட்டது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லீ யங் என்ற பெண், பேன்ட் அணிவதற்கு பதில், ஜீன்ஸ் பேன்ட் கலரில், பெயின்ட் அடித்து, மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, சூப்பர் மார்க்கெட் மற்றும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் என, அமெரிக்காவின் நியூயார்க் நகரையே, நாள் முழுவதும் வலம் வந்துள்ளார். ஆனால், யாருமே, அவர், பேன்ட் அணிவதற்கு பதிலாக, பெயின்ட் அடித்து வந்துள்ளார் என்பதை, கடைசி வரை கண்டுபிடிக்கவில்லை!
— ஜோல்னாபையன்.

