PUBLISHED ON : ஜூலை 11, 2021

அ நிறம் | அளவு
நம் அண்டை நாடான சீனாவின் பிரபலமான நடிகை, பேன் பிங்பின். மாடலிங் துறையிலும் கில்லாடி. சீனாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையரில் இவர் தான், முதலிடத்தில் உள்ளார். சீன மக்களிடம், இவருக்கு நல்ல செல்வாக்கு உண்டு.
இவரைப் போலவே தன் தோற்றத்தை மாற்றி, சென் ஜின்லிங் என்ற பெண், 'ஆன்லைன்' வர்த்தகத்தில் பல்வேறு பொருட்களுக்கு விளம்பரம் செய்து வருகிறார்.
துவக்கத்தில் இதை பெரிதுபடுத்தாத பேன் பிங்பின், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் புகார் வரவே, அந்த பெண் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
'கடந்த சில மாதங்களாக பேன் பிங்பின்னை விட, இந்த பெண் அதிகமாக சம்பாதித்து விட்டார். அந்த வயிற்றெரிச்சலில் தான், அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்...' என்கின்றனர், சீன மக்கள்.
—ஜோல்னாபையன்
