PUBLISHED ON : ஜூலை 11, 2021

நம் அண்டை நாடான சீனாவில் முக்கிய நகரங்களில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. சென்சென் மாகாணத்திலும் இதுபோன்ற கட்டடங்களுக்கு பஞ்சமில்லை.
சமீபத்தில் இங்குள்ள, 300 மீட்டர் உயரமுள்ள, 73 மாடிகளை உடைய கட்டடம், திடீரென அசையத் துவங்கியது. வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டன.
சாலையில் சென்றவர்கள், அந்த கட்டடம் ஊஞ்சல் போல் ஆடியதைப் பார்த்து, பயத்தில் ஓட்டம் பிடித்தனர்.
சிறிது நேரத்தில், இயல்பு நிலை திரும்பியது. 'நில நடுக்கம் காரணமாக இந்த கட்டடம் குலுங்கி இருக்கலாம்...' என, முதலில் அனைவரும் நினைத்தனர்.
ஆனால், 'நில நடுக்கம் எதுவும் நிகழவில்லை...' என, புவியியல் நிபுணர்கள் அறிவித்தனர். அந்த கட்டடம் மட்டும் குலுங்கியதற்கான காரணம் தெரியாமல், அதிகாரிகள் மண்டை காய்ந்துள்ளனர். அதில் வசித்த அனைவரையும் வெளியேற்றி, கட்டடத்துக்கும், 'சீல்' வைத்துள்ளனர்.
— ஜோல்னாபையன்
