PUBLISHED ON : அக் 06, 2013

என்றும் மனதில் நிலைத்து நிற்கும், பல அற்புதமான படங்களில், சிவாஜியோடு நடித்த பத்மினி. சிவாஜி மீது, மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டவர். அமெரிக்காவில் வசித்த அவர், சென்னைக்கு வந்திருந்த போது, அவரை சந்தித்து, 'சிவாஜி பெயரில் அளிக்கப்படும் விருதை, நேரில் வந்து, பெற்றுக் கொள்ள வேண்டும்...' என்று, கேட்டுக் கொண்டேன்.
'நிச்சயமாக வருவேன். சிவாஜி பெயரில் இருக்கற விருது, எனக்கு கிடைப்பதென்றால், பெருமை தானே...' என்றார் பத்மினி. ஆனால், விதி, சதி செய்து விட்டது. நிகழ்ச்சி நடக்கும் ஒரு சில நாட்களுக்கு முன், அவருக்கு, திடீரென்று, உடல்நலம் மோசமாகி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஸ்ட்ரெச்சரில், அவரை அழைத்துச் செல்லும் போது, உடன் இருந்த நடிகை ஷோபனாவிடம், 'என்னை சீக்கிரம் குணப்படுத்தி அனுப்ப சொல்லு. மகேந்திரன் என்னை கூப்பிட்டிருக்கான். சிவாஜி பேராலே விருது தந்து கவுரவிக்குறாங்க. கண்டிப்பாக நான் போகணும்...' என்று, பத்மினி கூறியுள்ளார். ஆனால், சிகிச்சை பயனளிக்காமல், அமரராகி விட்டார்.
பொதுவாக, திரைப் படங்கள் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு, பத்மினியின் மகன் பிரேம் வருவதில்லை. ஆனால், தாயார் இறந்த சில தினங்களில், எங்கள் நிகழ்ச்சிக்கு வந்து, 'என் தாயார், இந்த நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று, ஆவலாக இருந்தார். இன்று, அவர் நம்முடன் இல்லை. அவர் சார்பில், நான் இந்த விருதை பெற்றுக் கொள்கிறேன்...' என்று குறிப்பிட்டார். உடல் நலம் மோசமாக இருந்த போதும், பத்மினி, நடிகர் திலகத்தின் மீது, வைத்திருந்த மரியாதை, பாசம், என்னை நெகிழ வைத்தது. 'தன் உடல் நிலையை பற்றி கூட நினைக்காமல், உங்கள் விழாவை பற்றி, பப்பி அம்மா @பசிட்டிருந்தாங்க...' என்றார் ஷோபனா.
அன்னை இல்லத்தில், நடிகர் திலகத்தின் உடல், கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது. கலை உலகமே, கண்ணீரோடு நின்றது. கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கட்டுப்@பாட்டு வந்த நாகேஷை, நான் உள்ளே அழைத்துச் சென்@றன். சில நிமிடங்கள் மவுனமாக இருந்தவர், திடீரென்று, 'சார்... என்ன சார் இப்படி செய்துட்டீங்க! டேய்... (என்னைப்பார்த்து) இவர் இல்லைன்னா, தருமி இல்லடா...' என்று சொல்லி, உணர்ச்சி வசப்பட்டு அழுதார். அதற்கு மேல், அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. மெதுவாக வெளியே சென்றார்.
நடிகர் திலகத்துடன், பராசக்தி படத்திலிருந்து கூடவே நடித்து, நெருங்கி பழகிய, லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், 'ஷூட்டிங்கிற்கு, நான் லேட்டாக வரும் போதெல்லாம், 'ராஜு, டயத்துக்கு வாயேன். சரியான நேரத்துக்கு வரணும்'ன்னு சொல்லுவேய்யா... இப்போ நான் டயத்துக்கு வந்திருக்கேன்யா. பாராட்ட நீ இல்லேய்யா...' என்று கதறினார்.
அவரோடு நடித்த எல்லா நடிகர், நடிகைகளுக்கும் அவரிடம், ஒரு ஈடுபாடு கண்டிப்பாக இருக்கும். காரணம், அவரோடு நடித்த, எந்த நடிகர், நடிகைகளை வேண்டு மானாலும் எடுத்துக்கொண்டால், அவர்களின் கலைப் பயணத்தில், மெகா வெற்றி பெற்ற மூன்று படங்கள் என்று எடுத்தால், அதில் சிவாஜியுடன் நடித்த ஒரு படம், கண்டிப்பாக இருக்கும். ஏன், சிலருக்கு இரண்டு படங்கள் கூட இருக்கலாம்.
தனக்கு மட்டும் பெயர் வந்தால் போதாது; கூட நடிக்கிறவங்களும் சமமாக பெயர் கிடைக்க @வண்டும், அப்போது தான் படம் நிற்கும் என்பதில், சிவாஜி எப்போதுமே தெளிவாக இருந்தார்.
கடந்த, 1960ல், சென்னை எழும்பூரில் உள்ள, டான் பாஸ்கோ பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, நாங்கள் பாந்தியன் ரோடில் வசித்து வந்தோம். வீட்டுக்கு அருகே ஸ்கூல்.
என் தாயார் ஒய்.ஜி.பி., பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியை ஆரம்பித்த நேரம். நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், கட்டடம் இல்லாமல், கூரை போடப்பட்ட வகுப்பு அறைகள். பள்ளி ஆண்டு விழாவிற்கு, சிவாஜி கணேசன் வந்திருந்தார். அவர்தான் தலைமை. மாணவர்கள், பெற்றோர் எல்லாரும் பெஞ்ச்களிலும், தரையிலும் உட்கார்ந்திருந்தனர். நான் சிவாஜி சாரை, முதல் முறையாக அன்று தான் பார்த்தேன்.
என் தாயார், சிவாஜியை வரவேற்று பேசும்போது, 'கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுகிட்டு கொடுக்கும் என்பர். எங்களுக்கு கூரை கூட இல்லை. தெய்வம் எவ்வளவு கொடுத்தாலும், மகிழ்ச்சியாக, நன்றியோடு பெற்றுக் கொள் வோம்...' என்றார்.
விழாவில், சிவாஜி பேசும்போது, 'மொத்த ஸ்கூலுக்கும், கூரை போட முடியுமா என்று தெரியவில்லை. என்னால் முடிந்த, 10 ஆயிரம் ரூபாயை இந்தப் பள்ளி கட்டட நிதிக்கு, நன்கொடையாக அளிக்கிறேன். இந்தப் பள்ளி கண்டிப்பாக, பெரியதாக வளரும்...' என்று, வாழ்த்தினார். அவருடைய வாழ்த்து பலித்தது. இன்று, என் தாயார் நடத்தும் பத்ம சேஷாத்ரி பள்ளி, பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது.
தகுதியான காரியங்களுக்கு, நிறைய தர்மம் செய்வார் சிவாஜி. அவர் செய்யும் தர்ம காரியங்களை, கொடுக்கும் நன்கொடைகளை, விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. அதுதான் அவருடைய உண்மையான குணம்.
சிவாஜியின் தம்பி சண்முகத்தின் மகன் முரளி, எங்கள் பள்ளியில் தான் படித்தார். என் பெற்றோருக்கு, நெருக்கமாக இருந்தாலும், சிவாஜி என்றுமே ஸ்பெஷல் சலுகைகள் கேட்டதில்லை. என் தாயார் இந்த பள்ளியை, மிகுந்த கட்டுப்பாட்டோடு, ஒழுக்கமாக நடத்துகிறார் என்பதால், சிவாஜிக்கு, என் தாயார் மீது மிகுந்த மரியாதை உண்டு. எப்போதாவது, மாணவர் சேர்க்கை பற்றி பேச வேண்டியிருந்தாலும், என்னிடமோ, அப்பாவிடமோ தான் பேசுவார். 'டேய் உங்கப்பாவே, ராஷ்மியிடம் கேட்கிறதுக்கு, பயப்படுவாரு; நீ கேட்டு சொல்லு...' என்பார்.
எங்கள், 'யுனைட்டெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்' குழு, வியட்நாம் வீடு சுந்தரத்தின் கதை வசனத்தில், மேடையேற்றிய நாடகம், 'கண்ணன் வந்தான்!' அது தான் சிவாஜி, இரு வேடங்களில் நடித்த, கவுரவம் படம். அந்த நாடகத்தை, சிவாஜி ஒரே ஒரு முறை மட்டும் தான் பார்த்தார். பாரிஸ்டர் ரஜினிகாந்த் ரோலை, நாடகத்தில் செய்த என் தந்தையிடம், 'ஒய்.ஜி.பி., நல்லா பண்ணியிருக்கே. ஆனால், இதை எங்க கொண்டு போகிறேன் பாரு...' என்றார் சிவாஜி.
'பாரிஸ்டர் ரஜினிகாந்த் ரோலை, நான் öŒ#து, ஜூனியர் வழக்கறிஞர் கண்ணன் ரோலுக்கு சிவகுமாரையோ, முத்துராமனையோ நடிக்க சொல்லலாம். 'நீ கொஞ்சம் கம்மியாக நடி, அப்போ தான் பாரிஸ்டர் கேரக்டர் நிக்கும்'ன்னு கேட்க முடியுமா... அவங்க மனசு புண்படாது... நானே இரண்டு பாத்திரங்களிலும் நடித்தால், கண்ணன் ரோலை, அன்டர் பிளே செய்வேன். பாரிஸ்டர் கேரக்டரை, ஞாபகத்தில் வைத்து நடிப்பேன். மொத்தத்தில் ஆடியன்ஸ் மனசுல, அந்த கேரக்டரும், படமும் நிற்கணும்...' என்றார். அவரது தொழில் பக்தியை நினைத்து, வியந்து போனேன்.
* ஜெயா 'டிவி'யில் ஒளிப்பரப்பாகும், 'ஆல்பம்' நிகழ்ச்சியில், நடிகர் பிரபு பேட்டி அளித்தார். சிவாஜி, பிரபு மற்றும் நான் மூவரும் இருந்த படத்தை, அவருக்கு காட்டி அதுபற்றி கேட்டனர். 'என் தந்தையைப் பற்றிய விவரங்கள், அவரது நடிப்பு மற்றும் நடிப்பின் நுணுக்கங்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தயவு செய்து அண்ணன், 'ஒய்.ஜி.மகேந்திராவை கேளுங்கள். எங்களுக்கு (ராம்குமார், பிரபு) தெரியாததையும், அவர் சொல்வார். எங்கள் குடும்பத்தில், மூத்த சகோதரர் ஒய்.ஜி.மகேந்திரா...' என்று, குறிப்பிட்டார்.
***
— தொடரும்.
எஸ். ரஜத்
