sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திருந்தினால் வாழ்வுண்டு!

/

திருந்தினால் வாழ்வுண்டு!

திருந்தினால் வாழ்வுண்டு!

திருந்தினால் வாழ்வுண்டு!


PUBLISHED ON : ஜூன் 26, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 26, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடல் ஆரோக்கியத்திற்காக எவ்வளவு தான், நல்லவைகளை ஏற்றுக் கொண்டாலும், உடனே பலன் கிடைத்து விடாது. அதேசமயம், சிறிதளவே ஆனாலும் நஞ்சை அருந்தினால், அது, உடனே பலன் அளித்து விடும்.

இதுபோலவே, நல்லவைகள் பலனளிக்க நாட்களாகும்; தீயவைகளோ, உடனே பலனளித்து விடும். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல், பல ஆண்டுகள் படாத பாடுபட்டு காப்பாற்றிய நற்பெயர், ஒரு சில வினாடிகளிலேயே போய் விடும்.

நந்தனபுரம் என்ற சிற்றூரில், புரந்தரன் என்பவர் வாழ்ந்து வந்தார். மிகவும் நல்லவரான அவருக்கு, மாதவன் என்ற மகன் இருந்தான். தந்தையைப் போலவே, அவனும் நல்லவனாக இருந்தான். அவன் மனைவி சந்திரரேகை; பெயருக்கு ஏற்றாற் போல், நற்குணத்தவளாக விளங்கினாள்.

ஒருநாள், பூஞ்சோலையில் தன் மனைவியுடன் உலாவினான், மாதவன். அப்போது, ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மாலினி என்பவளைக் கண்டான். மிக அழகியான அவளைப் பார்த்ததும், அவன் மனம் மயங்கி, புத்தி தடுமாறியது.

அவள் மீது ஏற்பட்ட மோகத்தால், தன்னிடம் இருந்த செல்வம் அனைத்தையும் இழந்ததுடன், மனைவியை விட்டும் பிரிந்தான். கையில் காசில்லாத நிலையில், அவளுக்காக வழிப்பறியில் ஈடுபட்டான், பின், பொருளுக்காக கொலையும் செய்தான். ஆனால், எத்தனை காலங்கள் தான் தீய செயல்களை தொடர முடியும்.

உடலில் பல்வேறு பிணிகள் பீடித்து ஆட்ட, வழிப்பறியில் அவனால் ஈடுபட முடியவில்லை. இதனால், வறுமையில் வாடினான்.

பொருள் ஈட்ட முடியாத மாதவனை, விரட்டி விட்டாள், மாலினி. மனம் நொந்த மாதவன், பிணி மற்றும் வறுமையால், பைத்தியம் பிடித்தவனைப் போல, பல இடங்களிலும் சுற்றித் திரிந்து, கால் போன போக்கில் நடந்து, ஒரு மலை அடிவாரத்தை அடைந்தான். அவ்விடத்திற்கு வந்ததும், அதுவரை அவன் மனதை ஆட்டிப் படைத்த தீவினைகள் அனைத்தும் இருள் விலகுவதைப் போல விலக, மனத் தெளிவு அடைந்தான்.

மலையேறி, அங்கே எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட்டு, 'அடியேனின் பாவங்களையெல்லாம் எரித்து, நன்னிலை காட்டிய பெருமாளே... அடியேனை முழுமையாக ஆட்கொண்டு, அருள்புரி...' என வேண்டினான்.

மனம் திருந்தியவனுக்கு, அருள்புரிய, மாலவன் மறுப்பாரா! அவனுக்கு முக்தியையும் அளித்தார்.

மாதவனின் பாவங்களை எரித்து, அருள் புரிந்த அத்திருத்தலம் வேங்கடம்!

வேம் + கடம் என்ற சொல்லுக்கு, பாவங்களை எரிப்பது என்பது பொருள். இத்தகவலை, 'வேங்கடமே மெய்வினை நோய் தீர்ப்பதுவும்...' எனக் குறிப்பிடுகிறது, திவ்யபிரபந்தம். திருந்தியவர்களுக்கு வாழ்வளிக்க, திருவேங்கடத்து இறைவன் மறுப்பது இல்லை.

பி.என்.பரசுராமன்

திருவாசகம்!

சிந்தை செய்கை கேள்வி வாக்குச்

சீரில் ஐம்புலன்களால்

முந்தை ஆய காலம் நின்னை

எய்திடாத மூர்க்கனேன்

வெந்து ஐயா விழுந்திலேன் என்

உள்ளம் வெள்கி விண்டிலேன்

எந்தை ஆய நின்னை இன்னம்

எய்தல் உற்றியிருப்பனே!

விளக்கம்: சிவபெருமானே... நீ எனக்கு அருள் செய்த காலத்தில், எண்ணம், செய்கை, அறிவுரை மற்றும் பேச்சு என, என் ஐம்புலன்களின் மாறுபாட்டால், மூர்க்கனான நான், உன்னை அடையும் ஆற்றல் இல்லாதவனாக ஆகிவிட்டேன். உன்னை எண்ணாத நான், அப்போதே தீப்பாய்ந்து இறக்கவும் இல்லை. உன்னை நினையாமல் இருப்பதற்கு வெட்கப்படவும் இல்லை. உன்னிடம் பக்தி பூண்டவனைப் போல இருக்கிறேனே தவிர, இன்னும் பழையபடியே உண்டு, உடுத்தி வாழ்கிறேன்!

கருத்து: உலக வாழ்க்கையில் மயங்கிய எனக்கு அருள் செய்!






      Dinamalar
      Follow us