தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நல்லது செய்தால், உதவி தேடி வரும்!

நல்லது செய்தால், உதவி தேடி வரும்!

நல்லது செய்தால், உதவி தேடி வரும்!


PUBLISHED ON : ஆக 30, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமீபத்தில், அமெரிக்காவில், போலீசார் அத்துமீறி செயல்பட்டதில், கறுப்பர் இனத்தை சேர்ந்த, ஜார்ஜ் பிளாய்டு என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை கண்டித்து, அமெரிக்கா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. நியூயார்க்கின், பபப்லோ பகுதியில் உள்ள, பெய்லி அவென்யூவில், போராட்டக்காரர்கள் போட்ட குப்பைகள் சுற்றிலும் சிதறிக் கிடந்தன.

படத்தில் உள்ள, 18 வயது கறுப்பு இனத்தை சேர்ந்த, ஆன்டோனியோ கவ்னன் ஜூனியர், அதை பார்த்தார். மனம் பொறுக்கவில்லை. உடனே, தனி ஆளாக, தொடர்ந்து, 10 மணி நேரம், அவற்றை அகற்றி முழுமையாக சுத்தம் செய்தார்.

இந்த செயலை பார்த்தார், படத்தில் உள்ள, 27 வயது வெள்ளையர், மாட்ப்ளாக். ஆன்டோனியோவை பாராட்டும் விதமாக, தன்னுடைய முஷ்டாங் காரை, அன்பளிப்பாக வழங்கினார்.

இதையறிந்த உள்ளூர் வியாபாரியான, பாப் பிரைஸ்லாந்து, 'என்னுடைய ஏஜன்சி மூலம், பரிசாக வந்த காருக்கு, ஒரு ஆண்டுக்கான, இலவச இன்ஷூரன்சுக்கு ஏற்பாடு செய்கிறேன்...' என, வாக்களித்தார்.

பள்ளி இறுதி ஆண்டு மாணவரான, ஆன்டோனியோ, அடுத்து, 'பிசினஸ்' படிக்க விரும்புவதை அறிந்த, பபப்லோ மெடெய்லி கல்லுாரி, அவருக்கு, அந்த படிப்பை, முழு, 'ஸ்காலர்ஷிப்'புடன் இலவசமாக வழங்க முன் வந்துள்ளது.

ஒருநாள் நற்காரியத்திற்கே, இப்படி உதவி தேடி வருதுன்னா, அடிக்கடி நற்காரியம் செஞ்சா, எவ்வளவு உதவி தேடி வரும்; யோசியுங்கள்!

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us