PUBLISHED ON : ஜூன் 25, 2023

அ நிறம் | அளவு
தென் கிழக்காசிய நாடான தாய்லாந்தின் டிராங் மாகாணத்தைச் சேர்ந்தவர் ரோஜாகோர்ன் நானோன், 52. தொழில் அதிபரான இவரிடம் ஒரு விசித்திர பழக்கம் உள்ளது. இவர், தினமும் இரண்டு டம்ளர் முதலை ரத்தம் குடிக்கிறார். இதை குடிப்பதன் வாயிலாக உடல் சோர்வு நீங்கி, நரம்பு மண்டலங்கள் புத்துணர்வுடன் வேலை செய்வதாக, கூறுகிறார். கடந்த ஐந்தாண்டுகளாகவே முதலை ரத்தத்தை குடிக்கும் பழக்கம் இவரிடம் உள்ளது. அருகில் உள்ள முதலைப் பண்ணைக்கு சென்று, தினமும் ரத்தம் வாங்கி வருகிறார். ஒரு டம்ளர் முதலை ரத்தம், இவருக்காக சலுகை விலையில், 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
— ஜோல்னாபையன்
