தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து! - வாழைப்பழம்!

நம்மிடமே இருக்கு மருந்து! - வாழைப்பழம்!

நம்மிடமே இருக்கு மருந்து! - வாழைப்பழம்!


PUBLISHED ON : ஜூன் 25, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாக்க மாத்திரையாக வாழைப்பழம் செயல்புரிவதாக கண்டுபிடித்துள்ளனர், அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவ நிபுணர்கள்.

துாக்க மாத்திரையில், 'ட்ரைட்டோடன்' என்ற ரசாயனம் உள்ளது. இதே ரசாயனம் தான் வாழைப்பழங்களிலும் உள்ளது.

துாக்கத்திற்கு முக்கியமான இன்னொன்று, தசைகளின் இறுக்கம் நீங்கி, தளர்வடைய வேண்டும். இதை செய்யும் மக்னீச சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளது.

படுக்கையில் சாய்ந்தவுடன், சிலர் கால்களை மட்டும் போர்த்திக் கொள்வர். சிலர், காலுறை அணிந்து படுப்பர். இப்படி செய்வதால், காலுக்கு வெதுவெதுப்பான தன்மை கிடைக்கிறது.

துாக்கத்துக்கும், உடல் வெப்பத்துக்கும் தொடர்பு உண்டு. குறிப்பாக, கால்களில் வெப்பம் இருந்தால், உடனே துாக்கம் வந்து விடும். கால் கட்டை விரல்களை சேர்த்து துாங்கினால், விரைவில் துாக்கம் வந்துவிடும். இதற்கு காரணம், கால்களில் வெப்பம் பரவி அதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரித்தால், துாக்கம் தானாகவே வந்து விடும்.

வாழைப்பழத்தை சாப்பிட்ட பின், ஒரு மிளகை கடித்து, சுவைத்து மெல்ல வேண்டும். இப்படி செய்வதால், கபத்தால் வரும் தொல்லை இருக்காது. வெது வெதுப்பான நீரில் குளித்து, சிறிது நேரம் நடந்துவிட்டு படுத்தால், உடனே நல்ல துாக்கம் வரும்.

தொகுப்பு: சி.ரகு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us