PUBLISHED ON : நவ 07, 2021

அ நிறம் | அளவு
உத்தரபிரதேச மாநிலம் கன்னோச் மாவட்டத்தைச் சேர்ந்த, 15 வயது சிறுமி, சாந்தினி. கடந்த சில மாதங்களாக அழும்போது, தனக்கு கண்ணீருக்கு பதிலாக சிறிய கற்கள் கண்களில் இருந்து வருவதாக கூறுகிறார், இந்த சிறுமி. தினமும், 10 முதல் 15 சிறிய கற்கள் கண்களுக்குள்ளிருந்து வருவதாக கூறியதை அடுத்து, அதை நிரூபித்து காட்டும்படி கூறினர், கிராம மக்கள்.
கிராம மக்கள் முன்னிலையில் அந்த சிறுமி, தன் கண்களில் இருந்து விழுந்த கற்களை எடுத்துக் காட்டினாள். இது, உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கண் மருத்துவர் கூறுகையில், 'கண்ணீருக்கு பதிலாக கற்கள் வருவதாக கூறுவது சுத்தப் பொய். கண் இமைகளுக்குள் கற்களை மறைத்து வைத்து, அந்த சிறுமி மோசடி செய்கிறார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தால், உண்மை தெரிய வரும்...' என்கின்றனர்.
— ஜோல்னாபையன்
