/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
சூரியனை பார்த்தால், 'வெயிட்' குறையுமாம்!
/
சூரியனை பார்த்தால், 'வெயிட்' குறையுமாம்!
PUBLISHED ON : நவ 01, 2015

புதுசு புதுசாக யோசிப்பதற்கு சீனாக்காரர்களை யாரும் மிஞ்ச முடியாது. 'சூரியனை தொடர்ந்து உற்று நோக்கினால், உடல் எடை குறையும்...' என்ற, 'டிரெண்ட்' இப்போது, அங்கு உருவாகியுள்ளது. இதனால், சீனாவில் உள்ள கடற்கரைகளில், சூரிய அஸ்தமனமாகும் போது, ஏராளமானோர், குவிய துவங்கி விடுகின்றனர். கண்களில் குளிர் கண்ணாடி அணிந்து, தொடர்ந்து, சூரியனை, 30 நிமிடங்களுக்கு உற்று நோக்குகின்றனர்.
'சூரிய ஒளியை பார்த்தால், உடல் எடை குறையும் என்பது, என்ன லாஜிக்...' என, அவர்களிடம் கேட்டால், 'ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, இப்பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றினால், உடல் எடை குறையும். இந்த நேரத்தில், பெரும்பாலும் உணவை தவிர்க்க வேண்டும். சூரிய ஒளியை தொடர்ந்து பார்ப்பதால், உணவிலிருந்து கிடைப்பதை விட அதிகமான கலோரிகள் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும். அதனால், நமக்கு களைப்போ, சோர்வோ ஏற்படாது. தேவையற்ற கொழுப்பு சத்து குறைந்து, 'ஸ்லிம்' ஆகி விடுவோம்...' என்கின்றனர்.
— ஜோல்னா பையன்.

