PUBLISHED ON : நவ 01, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படத்தில் இருப்பவர் பெயர், தங்கப்பன்; வயது, 81. இவர், கடந்த 1954 முதல் பத்திரிகை வினியோகம் செய்து வருகிறார். வேலையில்லாமல் இருந்த போது, இத்தொழிலுக்கு வந்தவர், கேரளாவில் உள்ள கோன்னி என்ற இடத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியாக பணியில் சேர்ந்தார். ஆனாலும், அதுவரை தான் செய்து வந்த வேலையை விட்டுவிடாமல், காலையில் பத்திரிகை வினியோகம் செய்த பின் தான், பள்ளிக்கு செல்வார். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற போதும், பத்திரிகை வினியோகத்தில் இருந்து ஓய்வு பெற விரும்பவில்லை. 'நடக்க முடியும் வரை இந்த கைகள் பத்திரிகை ஏந்தும்...' என்கிறார் இந்த ஆசிரியர்.
— ஜோல்னா பையன்

