தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பிறருக்கு கெடுதல் செய்ய நினைத்தால்...

பிறருக்கு கெடுதல் செய்ய நினைத்தால்...

பிறருக்கு கெடுதல் செய்ய நினைத்தால்...


PUBLISHED ON : ஜூன் 19, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு ஊரில், சாமியார் ஒருவர் வசித்து வந்தார். எப்போதும் தியானம் செய்தபடி இருப்பவர், அங்குள்ள வீடுகளில் யாசகம் கேட்டு, ஒருவேளை மட்டும் உணவருந்தி வந்தார்.

ஒருநாள், யாசகம் கேட்டு, மூதாட்டி ஒருவர் வீட்டின் முன் நின்றிருந்தார். அப்போது, குடிபோதையில் இருந்த மூதாட்டியின் ஒரே மகன், அவளை அடித்தும், உதைத்தும் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.

இதைப் பார்த்த சாமியார், அவனிடமிருந்து மூதாட்டியை காப்பாற்றினார். அத்துடன் கோபத்தில், 'பெற்ற தாயையே உதைத்த நீ, நாசமாகப் போவாய்...' என்று, சாபம் கொடுத்தார்.

தன்னை மகன் அடித்து துன்புறுத்தியதை கூட பெரிதாக நினைக்காத அந்த மூதாட்டி, சாமியார் சபித்ததால், கடும் கோபம் அடைந்தாள்.

அன்று இரவு முழுதும் அவளுக்கு துாக்கமே வரவில்லை. சாமியாரின் சாபம் பலித்து, தன் மகனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கலவரம் அடைந்தாள். பாசம் காரணமாக, தன் குடிகார மகனை எப்படியாவது காப்பாற்றி விட முடிவு செய்தார்.

'இந்த சாமியார் உயிரோடு இருந்தால் தானே, இப்படி சாபம் விடுவார். அவரை தீர்த்துக் கட்டிவிட்டால், என் மகனுக்கு ஒன்றும் ஆகாமல் காப்பாற்றி விடலாம்...' என்ற எண்ணம் எழுந்தது.

அன்று, வழக்கம்போல பிச்சை கேட்டு வந்தார், சாமியார்.

சாமியார் மீது கடும் கோபத்தில் இருந்த மூதாட்டி, சோற்றில் விஷத்தை கலந்து, அவருக்கு கொடுத்து விட்டாள். சாமியாரும் அதை வாங்கிக் கொண்டு, தன் இருப்பிடத்திற்கு சென்றார்.

அப்போது, குடிபோதையில் அங்கு வந்த மூதாட்டியின் மகன், 'பசிக்கிறது. சாப்பாடு இருக்கிறதா...' என்று சாமியாரிடம் கேட்டான். அவரது அனுமதியை கூட பெறாமல், பாத்திரத்தில் இருந்த உணவை எடுத்து விழுங்கத் துவங்கினான்.

கொஞ்சம் கூட மீதம் வைக்காமல், பாத்திரத்திலிருந்த உணவு முழுவதையும் அவனே தின்று தீர்த்தான். சற்று நேரத்தில் மயங்கி சாய்ந்தவன், இறந்து போனான்.

பிறருக்கு கேடு நினைத்தால் அது நிச்சயம் நமக்கே வந்து சேரும். கடவுளிடம் உண்மையான பக்தி கொண்டவர்களின் சாபம் பலித்து விடும் என்பதற்கு, இக்கதையே உதாரணம். அதுமட்டுமல்லாமல், கெடு புத்தி வந்து விட்டால், அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்ய முற்படுவர். எல்லாம் விதியின் விளையாட்டு. நாம் தான் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

கே. ஆர். வி.,

ஆன்மிக தகவல்கள்!

தெய்வங்களுக்கு பூஜை செய்த பூக்கள், குங்குமத்தை மறுபடியும் பூஜைக்கு பயன் படுத்தக் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us