PUBLISHED ON : ஆக 06, 2023

ரஷ்யாவில் உள்ள புகழ்பெற்ற, 'காபி ஸ்மைல்' என்ற காபி தயாரிப்பு நிறுவனம், சமீபத்தில் வெளியிட்ட விளம்பரம், அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாய்ப்பால் கலந்த காபியை தயாரித்து விற்பனை செய்வதாக, வெளியிட்ட அறிவிப்பு தான், அது.
'இந்த காபி, கலப்படம் இல்லாத, 100 சதவீதம் துாய்மையான தாய்ப்பாலில் தயாரானது. தாய்ப்பாலை விற்பனை செய்யும் பெண்களிடமிருந்து பெற்று, இந்த காபியை தயாரித்துள்ளோம். இதன் சுவையை, வேறு எந்த காபியுடனும் ஒப்பிட முடியாது...' என, அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, 'வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியிட்டோம். தாய்ப்பால் காபியை நாங்கள் தயாரிக்கவில்லை...' என, அந்த நிறுவனம், 'பல்டி' அடித்தது.
ஆனால், 'தாய்ப்பால் காபியை அந்த நிறுவனம் சில நாட்களுக்கு விற்பனை செய்தது உண்மை தான்...' என, சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
— ஜோல்னாபையன்
