PUBLISHED ON : ஜூன் 12, 2022

பாம்பு கடித்து மரணமடைந்தால், இரண்டு லட்சம் ரூபாய் நஷ்டஈடு கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவில், 1972ல் இயற்றப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில், காட்டை ஒட்டிய பகுதியில், கொடிய விஷமுள்ள பாம்பு கடித்து ஒருவர் உயிரிழந்தால், அவர் வாரிசுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுக்குள், இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். வன இலாகாவின் இணைய தளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
குறிப்பிட்ட வகை பாம்புகளை அடித்தாலோ, கொன்றாலோ அது தண்டனைக்குரிய குற்றம். இதற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதனால், பாம்புகளை கண்டால் அதை அடித்து கொல்ல வேண்டும் என்ற எண்ணம், இப்போது குறைந்துள்ளது.
'டிஸ்கவரி' மற்றும் 'அனிமல் பிளானட்' போன்ற 'டிவி' நிகழ்ச்சிகளால், மக்கள் மனதில் பாம்புகள் மீதான பயம் குறைந்திருக்கிறது.
— ஜோல்னாபையன்
