PUBLISHED ON : ஜூன் 12, 2022

அ நிறம் | அளவு
கேரள மாநிலம், கோட்டயம், மரங்காட்டுபள்ளி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் ஜார்ஜ் குளக்கரா என்பவர், இதுவரை, 130 நாடுகளில் சுற்றி வந்து, தான் கண்ட காட்சிகளை, சொந்த சேனலான, 'சஞ்சாரி'யில் ஒளிபரப்பி வருகிறார்.
கடந்த, 27 ஆண்டுகளாக, பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று வரும் இவர், முதன்முதலாக, நேபாள நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.
உலகை சுற்றி வரும் இவருக்கு, விண்வெளியில் சுற்றும் மோகம் வந்து விட்டது. விண்வெளியில் சுற்றுலா போக ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதற்கான சிறப்பு பயிற்சிகளையும் செய்து வருகிறார். இதற்கான செலவு, 80 லட்சம் ரூபாய்.
விண்வெளி பயணத்தின்போது கேமரா இயக்கவும், படமாக்கும் காட்சிகள், தன் சேனலில் ஒளிபரப்பவும் அனுமதிக்கும்படி கோரிக்கை வைத்தார்; இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளன.
— ஜோல்னாபையன்
