PUBLISHED ON : பிப் 03, 2013

சீனாவில், ஏற்கனவே, 15 நாட்களில், 30 மாடி கட்டடத்தை கட்டி முடித்து, சாதனை நிகழ்த்தினர். இப்போது, அந்த சாதனையையும் முறியடிக்க திட்டமிட்டுள்ளனர். 90 நாட்களில், 450 மாடிகளை உடைய, பெரும் கோபுரத்தை கட்ட, முடிவு செய்துள்ளனர்.
இந்த கட்டடம், சியாங்ஜாங் ஆற்றங்கரையில் உள்ள, சாங்ஷா நகரில், அமையவுள்ளது. ஒரு நாளைக்கு, ஐந்து மாடி என்ற மதிப்பீட்டில், 90 நாட்களுக்குள், முழு கட்டடத்தையும், கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துபாயின், புர்ஜ் கலிபாவில் உள்ள, உலகின் மிக உயரமான கட்டடத்தை கட்டிய நிறுவனம் தான், இந்த கட்டடத்தையும் கட்டுவதற்கு, பணியமர்த்தப்பட்டுள்ளது.
இதில், 83 சதவீத இடங்கள், குடியிருப்புக்கும், மீதமுள்ளவை, வர்த்தக நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படவுள்ளன. இந்த கட்டடத்துக்கு, 'ஸ்கை சிட்டி' என, பெயரிட்டுள்ளனர். எவ்வளவு பெரிய நில நடுக்கம் ஏற்பட்டாலும், அதை தாங்கும் வகையில், அதி நவீன தொழில்நுட்பத்தில், இந்த கட்டடம், கட்டப்படவுள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
— ஜோல்னா பையன்.
