PUBLISHED ON : ஏப் 18, 2021

அ நிறம் | அளவு
கர்நாடக மாநிலம், வட கன்னடா மாவட்டம், சிர்சி கிராம காட்டுப் பகுதியில், கல்மாலா நதி ஓடுகிறது. இந்நதியின் ஆற்றுப் படுகையில் உள்ள பாறைகளில், 1,000 சிவலிங்க சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த சிவலிங்க சிலைகளை காண, பக்தர்கள் மட்டுமின்றி, ஏராளமான சுற்றுலா பயணியரும் வருகின்றனர்.
விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னன், பிரபல சிற்பிகளை அழைத்து, நதி நீர் படுகையில், சிவலிங்க சிலைகளை வடிக்கச் செய்தார். கோடையில், நதி நீர் மிகவும் குறைந்திருக்கும் சமயங்களில், 1,000 சிவலிங்கங்களுடன், பிள்ளையார் போன்ற மற்ற கடவுளர்களின் சிலைகளையும் காணலாம்.
— ஜோல்னாபையன்
