PUBLISHED ON : ஏப் 18, 2021

* சாதம் வடித்த தண்ணீரில், கோதுமை மாவை பிசைந்து பூரி செய்தால், மிகவும் சுவையாக இருக்கும்
* குலோப்ஜாமூன் உருண்டைகளை அழுத்தி உருட்டாமல், மிருதுவாக உருட்டி எண்ணெயில் பொரித்து, ஜீராவில் போட்டால் மிருதுவாக இருக்கும்
* காலையில் வைத்த சாம்பாரை மீண்டும் மாலையில், இட்லி, தோசை போன்ற டிபனுக்கு தொட்டுக்கொள்ள உபயோகப்படுத்தும்போது, சிறிது வெந்தயம், தனியாவை வறுத்து பொடி செய்து போட்டால், ஹோட்டல் சாம்பார் போல் வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்
* தேங்காயும், பருப்பும் இல்லாமல் கூட்டு செய்ய வேண்டுமா... ஒரு டம்ளர் பாலில், மூன்று தேக்கரண்டி கடலை மாவு, இரண்டு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி பொடித்த சீரகம் ஆகியவற்றை கலந்து காய்கறியில் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி, தாளித்து விட்டால் போதும். தேங்காய் அரைத்த கூட்டு தோற்றுப்போகும்
* முளைக்கீரை, அரைக்கீரை என, ஏதாவது ஒரு கீரையை பொடியாக நறுக்கி பாகற்காயுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டால், சிறிது கூட கசக்காது. கீரையும், பாகற்காயும் சேர்ந்து மணமாகவும் இருக்கும்.
