தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்!

ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்!

ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்!


PUBLISHED ON : டிச 22, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 22, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவிலேயே, ஒன்பது ஆஞ்சநேயர் சிற்பங்களை, ஒரே இடத்தில் உள்ளடக்கிய ஜெயவரத ஆஞ்சநேயர் கோவில், திண்டுக்கல் அருகிலுள்ள குலசேகரன்கோட்டையில் இருக்கிறது. ஒன்பது பலன்களை தரும் இவர்களை தரிசிப்பது விசேஷமானது.

ஆஞ்சநேயர், சஞ்சீவி மலையை, தெற்கே எடுத்து செல்லும்போது, விழுந்த துகள்கள் எல்லாம் மலைகளாகி சிறப்பு பெற்றுள்ளதாக, தல புராணங்கள் கூறுகின்றன. திண்டுக்கல் அருகிலுள்ள குலசேகரன் கோட்டையிலுள்ள சிறுமலையும், இதன் துகளாகக் கருதப்படுகிறது.

இந்த மலை அடிவாரத்தில், ஜெயவரத ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றி, மாலை போல், ஒரு நீரோடை ஓடுகிறது. நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், ஜெயவரத ஆஞ்சநேயர். இவர் மீது, தினமும், காலை, 7:00 மணி முதல் 7:20க்குள், சூரியக்கதிர் படர்கிறது.

ஆஞ்சநேயருக்கு ஒன்பது வகையான கல்யாண (நல்ல) குணங்கள் உண்டு. அந்த குணங்களின் அடிப்படையில், நவ ஆஞ்சநேயர், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம், ஒன்பது வகையான பிரார்த்தனைகளை செய்யலாம்.

ஜெயவரத ஆஞ்சநேயர் -- திட்டங்களில் வெற்றி; பக்த ஆஞ்சநேயர் - -சனி தோஷ நிவர்த்தி; பால ஆஞ்சநேயர் - -குழந்தை பாக்கியம்; பவ்ய ஆஞ்சநேயர் - -தொழில், வியாபாரம், பணியில் லாபம்; யோக ஆஞ்சநேயர் - -அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுதல்...

தியான ஆஞ்சநேயர் - -மன அமைதி; வீர ஆஞ்சநேயர் - -பிரச்னைகளை தைரியமாக சந்தித்தல்; பஜன ஆஞ்சநேயர் -- கல்வி, கலைகளில் சிறப்பு; தீர ஆஞ்சநேயர் - -மனோபலம் பெறுதல்.

இங்குள்ள மூலவர் சிலை செய்ய, நாகர்கோவில் அருகே உள்ள மயிலாடியில் கல் எடுக்கப்பட்டது. கிழக்கு பார்த்து அமைந்துள்ளது, கோவில். வாசலில் தெற்கு நோக்கி, 23 அடி உயர ஆஞ்சநேயர், சுண்ணாம்பு கலவையால் ஆன, சுதை சிற்பமாக அருள்பாலிக்கிறார்.

மூலவர், ஜெயவரத ஆஞ்சநேயரைச் சுற்றி, தெற்கு நோக்கி, மூன்று ஆஞ்சநேயர்களும், மேற்கு நோக்கி, இருவரும், வடக்கு நோக்கி, மூவரும் அருள்பாலிக்கின்றனர். எந்த திசையில் இருந்து பிரச்னை வந்தாலும், அவற்றை தீர்த்து வைப்பதே இவர்களது பணி என, பக்தர்கள் நம்புகின்றனர்.

ஆஞ்சநேயர் ஜெயந்தி மற்றும் அமாவாசையன்று, வணங்குவது சிறப்பு. தை, ஆடி அமாவாசைகள் மிகவும் உகந்த நாட்கள்.

காலை, 8:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

மதுரை - திண்டுக்கல் நான்கு வழி சாலையில், 32 கி.மீ., துாரத்தில், குலசேகரன்கோட்டை உள்ளது.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us