தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஓடையில், தங்கம்!

ஓடையில், தங்கம்!

ஓடையில், தங்கம்!


PUBLISHED ON : செப் 08, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆஸ்திரேலியாவில் இருக்கிறது, கோல்டுரஷ் என்ற நகரம். இங்கு, ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 1851ல், இங்கு, தங்கம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தபடியாக, பெல்லாரட்டுக்கு அருகே உள்ள க்ளூன்ஸ் மற்றும் பினிங்யோன் ஆகிய இடங்களில் தங்கம் இருப்பதாக கண்டுபிடிக்கபட்ட போது தான், உலகமே ஆஸ்திரேலியா பக்கம் கவனத்தை திருப்பியது.

இங்குள்ள ஓடை ஒன்றில், மணலில் தங்கத் துகள்கள் கலந்திருப்பதை அறிந்தனர், மக்கள்.ஒவ்வொரு நாளும், மண் வெட்டியையும், சல்லடையையும் எடுத்து, ஓடைக்கு வந்து விடுகின்றனர்.

ஓடை மணலை அள்ளி சலித்து, தங்கம் இருக்கிறதா என்று ஆராய்கின்றனர். எப்போதாவது, ஒரு சில சமயங்களில், சிறிய அளவில் தங்கத் துகள்கள் கிடைப்பது உண்டாம்.

தங்கம் கண்டுபிடிக்கபட்ட பின், விக்டோரியா நகரின் ஜனத்தொகை, ஏழு மடங்கு உயர்ந்தது. பெருமளவில் தங்கம் கிடைத்தாலும், இங்கு வாழ்வோர், இன்றும் பழமையை விரும்புகின்றனர். 150 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தனரோ, அப்படியே தான் இப்போதும் இருக்கின்றனர் என்பது, வியப்பாக உள்ளது.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us