PUBLISHED ON : பிப் 02, 2014

அ நிறம் | அளவு
சாப்பாட்டு ராமர்களுக்கு போட்டியாக, இப்போது, சாப்பாட்டு ராமிகளும் கிளம்பி விட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த, மாலி ஸ்குயிலர் என்ற இளம் பெண், சமீபத்தில், மூன்றே நிமிடங்களில், இரண்டு கிலோ மாட்டிறைச்சியை சாப்பிட்டு, சாதனை நிகழ்த்தியுள்ளார். மாட்டிறைச்சியை சாப்பிடும் காட்சியை, இணையதளங்களில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, இவர், இதற்கு முன், இரண்டு கிலோ இறைச்சியை, ஆறு நிமிடங்களில் சாப்பிட்டது தான், உலக சாதனையாக இருந்ததாம். தான் நிகழ்த்திய அந்த சாதனையை, தானே முறியடித்துள்ளார் இந்த இளம் பெண்.
— ஜோல்னா பையன்.
