PUBLISHED ON : மார் 10, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடக்கு ஜப்பானில், மசோமனாய் டகினோ இடுகாடு உள்ளது. இங்கு, ஒரு பிரமாண்ட மண் மேடு உள்ளது. இதன் உள்ளே, பிரமாண்ட புத்தரை காணலாம். வட்டமான மண் மேட்டை சுற்றி, 1.50 லட்சம் நீல வண்ணம் உடைய, நறுமண பூச்செடிகளை நட்டு வைத்துள்ளனர்.
மேலும், 40 அடி அகலத்தில், கால்வாய் போல் வெட்டி, புத்தரை அருகில் சென்று தரிசிக்க வழி செய்துள்ளனர்.
துாரத்திலிருந்து, மண்மேடை பார்த்தால், புத்தரின் தலை தான் தெரியும்! நெருங்கினால், 13.5 அடி உயர கம்பீர புத்தரை தரிசிக்கலாம். உள்ளே, மண் சரியாமல் இருக்க, சுற்றி கான்கிரீட் சுவர் போடப்பட்டுள்ளது.
வண்ண செடிகள், வசந்த காலத்தில் பச்சையாகவும், கோடை காலத்தில், கருஞ்சிவப்பு வண்ணமாகவும் காட்சியளிக்கும்.
— ஜோல்னாபையன்.

