PUBLISHED ON : மார் 31, 2013

ஹாலிவுட் ரசிகர்களை, தன் கவர்ச்சியால் கிறங்கடிக்கும், நடிகை ஜெனீபர் லவ் ஹெவிட்டுக்கு, 34 வயதாகிறது. ஆனாலும், இவரது அழகு இன்னும் குறையவில்லை. ஹாலிவுட்டில், இவருக்கென, தனி ரசிகர் வட்டமே உள்ளது. இவர், சமீபத்தில் விடுத்த ஒரு அறிவிப்பு, ஹாலிவுட் ரசிகர்களை மட்டுமல்லாமல், நடிகர், நடிகைகள் மத்தியிலும், பரபரப்பு பட்டாசை கொளுத்திப் போட்டிருக்கிறது. விஷயம் வேறொன்றுமில்லை; மேடம், தன் மார்புகளை, 30 கோடி ரூபாய்க்கு இன்சூர் செய்ய திட்டமிட்டுள்ளார். இதுபற்றி சில இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் தெரிவித்தபோது, '30 கோடி ரூபாயா!' என அவர்கள், ஆச்சரியம் தெரிவித்ததோடு, 'அவ்வளவு தொகைக்கு இன்சூர் செய்ய முடியாது...' என, தயக்கத்துடன் தெரிவித்தனர். ஆனால், '30 கோடி ரூபாய்க்கு, ஒரு நயா பைசா குறைக்க மாட்டேன்; என் அழகுக்கு, இந்த தொகை எல்லாம், ரொம்ப கம்மி...' என, அதிரடியாக அறிவித்துள்ளார், ஜெனீபர்.
— ஜோல்னா பையன்.

