sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல....

/

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : மார் 31, 2013

Google News

PUBLISHED ON : மார் 31, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம நாராயணனின் 126வது படம்!



உலகிலேயே அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவர் ராம.நாராயணன். குரங்கு, நாய், பாம்பு என்று மிருகங்களை வைத்தே அதிகப்படியான படங்களை இயக்கிய அவர், சமீபத்தில் சந்தானம் - பவர் ஸ்டார் சீனிவாŒன் நடித்த, கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தை தயாரித்தார். அதைத் தொடர்ந்து, இப்போது தன், 126வது படமாக, நான் சரக்கு நீ ஊறுகாய் என்றொரு படத்தை தயாரித்து இயக்குகிறார். இந்த படத்தில், பவர் ஸ்டாருடன், ஒரு குரங்கும் முக்கிய வேடத்தில் இடம் பிடித்துள்ளது.

சினிமா பொன்னையா

ஜோதிட நம்பிக்கையில் அனுஷ்கா!



ஆன்மிகம், ஜோதிடம் இரண்டிலுமே அபார நம்பிக்கை கொண்டவர் அனுஷ்கா. படங்களுக்கான, 'அட்வான்ஸ்' வாங்கும்போது, கதை கேட்கும்போது என, நல்ல நேரம் பார்த்தே செயல்படுவார். மேலும், சில சர்ச்சைக்குரிய டைரக்டர்களின் படவாய்ப்புகள் வந்தால், அதில் நடிப்பதா, வேண்டாமா என்பதை, தன் குடும்ப ஜோதிடரை ஆலோசித்தே முடிவெடுக்கிறார். நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை!

எலீசா

விமலை புலம்பவிட்ட படாதிபதிகள்!



கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார் விமல். அவரிடத்தில், இப்போது உங்களது படக்கூலி பல கோடிக்கு எகிறி விட்டதாக கூறப்படுகிறதே? என்று கேட்டால், 'என்னது கோடியா? அதுக்கு எத்தனை சைபர் போடணும்?' என்று கேட்கிறார். அதோடு, கைநிறைய படம் இருந்தாலும், இன்னமும் கைநிறைய சம்பளம் வாங்க முடியல, என்று சொல்லும் விமல், 'பல புரடியூசருங்க, பேசினதுல பாதி சம்பளத்தை கூட பைசல் பண்ண மாட்டேங்கிறாங்க...' என்றும் புலம்புகிறார்.

சி.பொ

லட்சுமிமேனன் பச்சைக்கொடி!







கும்கி, சுந்தர பாண்டியன் படங்களில் நடித்த லட்சுமிமேனன், அடுத்து முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். 'அப்படியென்றால், கவர்ச்சி நடிப்புக்கு மாற வேண்டியிருக்குமே?' என்று கேட்பவர்களிடம், பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிற பட்சத்தில், அதிரடி கவர்ச்சி நாயகியாக அவசியம் உருவெடுப்பேன்...' என்று கூறியுள்ளார் லட்சுமிமேனன். வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!

எலீசா

ஆர்யாவுக்கு பொருத்தமான ஹன்சிகா!



சேட்டை படத்துக்காக ஆர்யா, ஹன்சிகா நடித்த, 'அகலாதே அகலாதே' என்ற பாடலின் வீடியோவை, யுடியூப்பில் வெளியிட்டதை அடுத்து, ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 'பாடலை விட, பாடலில் நடித்த ஆர்யா - ஹன்சிகா இருவரது அந்நியோன்யமான நடிப்பு அட்டகாசமாக உள்ளது' என்று பெருவாரியான ரசிகர்கள் கருத்து சொன்னதையடுத்து, 'இப்போதைய நடிகையரில், ஹன்சிகா தான் எனக்கு பொருத்தமான ஜோடி...' என்று, 'பில்டப்' கொடுத்து வருகிறார் ஆர்யா.

சி.பொ.,

விஷ்ணுவுக்கு புதிய படமில்லை!







வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமான விஷ்ணுவுக்கு, நீர்ப்பறவை படத்தையடுத்து, புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிட்டவில்லை. சில நட்பு வட்டார இயக்குனர்களிடம் கேட்டு பார்த்தும், யாரும் செவி சாய்க்காததால், மனசுடைந்து போய் விட்டார் விஷ்ணு. இதையடுத்து, சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர் மனைவி ரஜினி, விஷ்ணுவுக் காக ஒரு கதை தயார் செய்துள்ளார். அதை படமாக்க, சில படாதிபதிகளிடம் பேசி வருகிறார்.

சி.பொ.,

தயாரிப்பாளர் தேடும் வடிவேலு!







கே.எஸ்.ரவிக்குமார், சிம்புதேவன் உட்பட, மூன்று இயக்குனர்களிடம் கதை ஓ.கே., செய்து வைத்துள்ளார் வடிவேலு. ஆனால், அந்த கதையை சொல்லி, வடிவேலுதான் ஹீரோ என்று சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் சொன்னதும், தயாரிப்பாளர்கள் நழுவிக் கொள்கின்றனர். அதனால், இப்போது தனக்கான தயாரிப்பாளர்களை, தானே தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் வடிவேலு.

சினிமா பொன்னையா

பூபதி பாண்டியன் இயக்கும், பட்டத்து யானை படத்தில், சமையல் கலைஞராக நடிக்கிறார் விஷால். இப்படத்தில் விஷாலின் சமையலை ருசி பார்த்து, மார்க் போடுவது தான் படத்தின் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு வேலையாம்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us