PUBLISHED ON : மார் 31, 2013

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாலிவுட்டில், வித்தியாசமான வேடங்களில் நடித்து, ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர், சோபியா வெர்கரா. இவர், தற்போது, 'மாச்செட் கில்ஸ்' என்ற படத்தில், சாகச வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம், விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் போஸ்டர், சமீபத்தில் வெளியானது. அதில், தன் மேலாடைக்கு மேல், துப்பாக்கி வடிவ 'பிரா'வை, சோபியா அணிந்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த <உடை, தற்போது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோபியா அணிந்திருக்கும் 'பிரா'வின் இரு முனைகளும், துப்பாக்கி போல் இயங்குகின்றன.
அதிலிருந்து, குண்டுகள் சரமாரியாக சீறிப் பாய்வதைப் போல், அந்த போஸ்டரில், காட்சி இடம் பெற்றுள்ளது. படம் வெளியானதும், இந்த துப்பாக்கி விவகாரம், வேறு என்னென்ன சர்ச்சைகளை ஏற்படுத்தப் போகிறதோ!
— ஜோல்னா பையன்.

