தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சர்வதேச இனவெறி ஒழிப்பு தினம்!

சர்வதேச இனவெறி ஒழிப்பு தினம்!

சர்வதேச இனவெறி ஒழிப்பு தினம்!


PUBLISHED ON : மார் 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்ச் 21, சர்வதேச இனவெறி ஒழிப்பு தினம்

க டந்த, 1960ல், தென்னாப்ரிக்காவிலுள்ள ஷார்ப்வில்லே நகரில் அமைதியான முறையில் மார்ச் 21 அன்று ஆர்ப்பாட்டம் செய்த, கருப்பின மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது, அந்நாட்டு காவல்துறை. இந்த சம்பவத்தில், 69 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் துயர நிகழ்வு, நிற வெறிக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த தியாகத்தை நினைவுகூரும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை, 1966ம், ஆண்டு சர்வதேச இனவெறி ஒழிப்பு நாளாக மார்ச் 21ம் தேதியை அறிவித்தது.

நோக்கங்கள்...

விழிப்புணர்வு: நிறம், இனம், வம்சாவளி மற்றும் தேசிய அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் அனைத்து பாகுபாடுகளையும் எதிர்த்துப் போராடுவதற்கான அவசியத்தை வலியுறுத்துதல்.

மனிதாபிமானம்: அனைத்து மனிதர்களும் சமமானவர்கள், அவர்களுக்கு சமமான கண்ணியம் மற்றும் உரிமைகள் உள்ளன என்ற செய்தியை பரப்புதல்.

நடவடிக்கை: உலக அரசுகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இனவெறியை தடுப்பதற்கும், ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதற்கும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அழைப்பு விடுதல்.

மனிதர்களிடையே ஆரோக்கியமான சமூகத்தை பாதுகாக்க, சமத்துவமான மனித உரிமைகளையும் நிலைநாட்டுவோம்!

- திருநிறைச்செல்வன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us