PUBLISHED ON : டிச 21, 2014

அன்பிற்கு ஜாதி, மதம் இல்லை என்பதை நிரூபித்து இருக்கிறார் ராகினி என்ற இளம் பெண்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திள்ள கட்டப்பனையைச் சேர்ந்த முஸ்லிம் வாலிபர் ஒருவரின் இரண்டாவது மனைவி, கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த ஷெபீக் என்ற ஐந்து வயது சிறுவனை கொடுமைப்படுத்தியுள்ளார். ஒரு நாள் மனைவி பேச்சை கேட்டு, சிறுவனை தாறுமாறாக தாக்கியுள்ளார் வாலிபர்.
பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுவனை, ஊர் மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸ் வழக்கு மற்றும் அரசு தலையீட்டை அடுத்து, குழந்தை வேலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இந்நிலையில், 'குழந்தையை கவனிக்க யாராவது முன் வருவரா?' என்று அதிகாரிகள் தேடிய போது, அங்கன்வாடி பள்ளி ஆயாவான, இளம் பெண் ராகினி முன் வந்து. கடந்த ஒரு ஆண்டாக அவனை கவனித்து வந்தார். தற்போது, உடல் நலம் தேறிய சிறுவன், ராகினியுடன் மகிழ்ச்சியாக இருக்கிறான். திருமணம் ஆகாத ராகினி, ஷெபீக்கை சொந்த மகனாக அன்பு காட்டி, அரவணைத்து வளர்த்து வருகிறார்.
— ஜோல்னாபையன்.
