PUBLISHED ON : டிச 21, 2014

அ நிறம் | அளவு
திகிலடைய வைக்கும் கனவுகளை தவிர்க்க வேண்டுமானால், இரவு, 8:00 மணிக்குள், 'டிவி'யை அணைத்து விட வேண்டும். 'இரவு, 10:00 மணி வரை தூக்கம் வராதே என்ன செய்வது?' என்று, சிலர் கேட்கக் கூடும். வீட்டிலே அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி மற்றும் அத்தை என, யாராவது மூத்த குடிமக்கள் இருந்தால், நிதானமாக அவரது படுக்கை அருகே உட்கார்ந்து, அந்த வயதானவரின் கால்களை மிருதுவாக பிடித்து விடுங்கள். பத்து நிமிடத்தில் அவர்களுக்கு தூக்கம் வருமோ, வராதோ உங்களுக்கு நிச்சயமாக வந்து விடும். தூக்கம் மட்டுமல்ல, அந்தப் பெரியவரின் ஆசியும் வந்து சேரும்.
— பாக்கியம் ராமசாமி.
