PUBLISHED ON : பிப் 25, 2018

அ நிறம் | அளவு
ஐரோப்பிய நாடான இத்தாலியில் வசிப்பவர், லெடிஷா மார்ஷல், வயது, 51; இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் மூவருக்குமே, வலி என்றால் என்னவென்றே தெரியாது.
'வலியா... அது எப்படி இருக்கும்...' என, கேட்கின்றனர், இவர்கள். ஊசி குத்தினாலும், கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும், யாராவது அடித்தாலும், இவர்களுக்கு வலிக்காதாம்.
இத்தாலியைச் சேர்ந்த டாக்டர்களோ,'மரபு ரீதியான விஷயங்களால் இதுபோன்ற நிகழ்வு ஏற்படலாம்; ஆனால், வலியை உணர முடியாத இக்குடும்பத்தினரின் பிரச்னை, எங்களுக்கு சவாலாகவே உள்ளது. விரைவில் இதற்கான காரணத்தை கண்டுபிடிப்போம்...' என்கின்றனர்.
— ஜோல்னாபையன்.
