PUBLISHED ON : பிப் 04, 2018

அ நிறம் | அளவு
மக்களுக்கு, 'சேவை' செய்வது எப்படி என்பதை, பா.ஜ., கட்சியை சேர்ந்த சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங்கை பார்த்து, மற்ற தலைவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும்.
தன் மருமகள் வசதியாக குழந்தை பெற வேண்டும் என்பது, முதல்வரான இந்த மாமனாரின் ஆசை. அதற்கு என்ன செய்தார் தெரியுமா... அரசு மருத்துவமனையில், ஒரு மாடியில் இருந்த நோயாளிகள் அனைவரையும் வெளியேற்றினார். சிகிச்சை பெற்று வந்தவர்களை காலி செய்தபோது, அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த தேசிய விளையாட்டு வீரரான, 'கிக் பாக்சர்' சாம்பியன் ஹரிகிருஷ்ணனும், ஐ.சி.யு.,விலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதன் விளைவாக, போட்டியின்போது, தலையில் அடிபட்டு மரணத்துடன் போராடிய இவர், மரணமடைந்தார். இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
— ஜோல்னாபையன்.
