
ஹாலிவுட் நடிகையும், மாடல் அழகியுமான கிம் கர்தாஷியன், ஏடா கூடமாக போஸ் கொடுத்து, பிரபலமானவர். வெளியிடங்களுக்கு செல்லும்போது, வித்தியாசமான உடை அலங்காரத்துடன் சென்று, பரபரப்பை ஏற்படுத்தி விடுவார். அமெரிக்காவிலிருந்து வெளியாகும், 'பேப்பர்' என்ற பத்திரிகையின் அட்டைக்கு, இவர் கொடுத்த போஸ்கள் தான், தற்போது அங்கு பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளது. அதில் ஒரு புகைப்படத்தில், கவர்ச்சியாக உடையணிந்துள்ள கிம், தன் பின்புறத்தில், ஒரு கோப்பையை வைத்துள்ளார். தன் கைகளில் வைத்துள்ள பாட்டிலில் இருந்து, பின்புறம் உள்ள கோப்பைக்கு மதுவை ஊற்றுவது போல், அந்த புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
மற்றொரு புகைப்படத்தில், தன் பின்புற அழகை முழுவதுமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதுடன், உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துள்ளதால், அவரின் அழகு அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. கறுப்பு உடையை, பின்புறத்துக்கு கீழ், தாழ்வாக பிடித்திருப்பது போல் அந்த புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்து, அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கொதித்து எழுந்து, 'கவர்ச்சியாக போஸ் கொடுக்கலாம்; ஆனால், இப்படி போஸ் கொடுப்பதெல்லாம் ரொம்ப ஓவர்...' என, புலம்புகின்றனர். ஆனால், கிம்மோ, 'டேக் இட் ஈசி...' என, கண்களை சிமிட்டி புன்னகைக்கிறார்.
— ஜோல்னாபையன்.

