/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
சுயநலத்துடன் அதிகாரத்தை பயன்படுத்தாதவர்!
/
சுயநலத்துடன் அதிகாரத்தை பயன்படுத்தாதவர்!
PUBLISHED ON : டிச 07, 2014

ஐதராபாத்தை சேர்ந்த எச்.வெங்கடேஷ். 1998ல் ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, போலீஸ் அதிகாரி ஆனார். நேர்மை மற்றும் துணிச்சல்காரரான இவர், குற்றம் செய்தவர்கள் பெரும்புள்ளிகளானாலும் நடவடிக்கை எடுக்க தயங்காதவர். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை சேர்ந்த ராமலிங்க ராஜுவை துணிந்து கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தினார். பெரும் புள்ளிகளான ரெட்டி சகோதர்களும் இவரிடம் இருந்து தப்பவில்லை. இப்படி பெரும்புள்ளிகளை கைது செய்த போது, இவருக்கு ஏகப்பட்ட மிரட்டல்கள். ஆனால், அதுக்கெல்லாம் பயப்படாமல், தன் கடமையை செய்தார். தற்போது, கேரளாவில் டி.ஐ.ஜி.,யாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி வங்கி அதிகாரியாக பணியாற்றுகிறார். இருவரும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவதால், குழந்தைகளை சரியாக பராமரிக்க முடியவில்லை. தன் போலீஸ் அதிகாரத்தை பயன்படுத்தி, பணி மாற்றத்துக்கு முயலாமல், மனைவியை, வேலையை விட சொல்லாம் என்று யோசித்து வருகிறார்.
— ஜோல்னாபையன்.

