தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பாடிக் கொண்டிருக்கும் போதே...

பாடிக் கொண்டிருக்கும் போதே...

பாடிக் கொண்டிருக்கும் போதே...


PUBLISHED ON : டிச 07, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 07, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பாடிக் கொண்டு இருக்கும் போதே மேடையில் உயிர் விட வேண்டும்; அதுதான் என் ஆசை...' என்கிறார் பழம்பெரும் பாடகி மாதுரி. சிறு வயதிலிருந்தே சங்கீதம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். இவரது அம்மா சாரதாம்பாள், பிரபல பாடகர் லால்குடி ஜெயராமின் தந்தை, லால்குடி கோபால ஐயரின் சிஷ்யை என்பதால், சிறுமி மாதுரிக்கும் சங்கீத ஞானம் ஏற்பட்டது.

மாதுரிக்கு கர்நாடக இசையை விட, சினிமா பாடல்கள் மீது தான் மோகம். வீட்டில் சினிமா பாடல்கள் பாடவோ, கேட்கவோ தந்தை அனுமதித்தது இல்லை. பள்ளிக்கு செல்லும் போது ஓட்டல்களில் உள்ள வானொலியில் இருந்து ஒலிக்கும் சினிமா பாடல்களை கேட்டு, அதை தனிமையில் பாடி ரசித்திருக்கிறார். 18வயது ஜெயராமன், சிறுமியான மாதுரியை மணந்தார். இன்று, கணவர் உயிருடன் இல்லை; இவரது இரு மகன்கள் கனடாவில் பணியாற்றுகின்றனர். அடிக்கடி மகன்கள் வீட்டுக்கு போய் வருகிறார் மாதுரி.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us