PUBLISHED ON : அக் 16, 2022

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படத்திலுள்ள பெண்ணின் பெயர்: பவுலின். வயது: 56. உயரம் 2.5 அடி தான். ஆனால், உழைப்பால் உயர்ந்துள்ளார்.
கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த இவர், கிடைக்கும் வேலைகளை செய்து, அந்த வருமானத்தில், தன், 95 வயது தாய் மற்றும் சகோதரரின் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
இவர், கடுமையான வயல் வேலைகள் செய்வதை, யாரோ ஒருவர், படம் எடுத்து சமூக வலைதளத்தில் போட்டுள்ளார்.
இதைப் பார்த்த துபாயை சேர்ந்த பெண் ஒருவர், ஆலப்புழா வந்து, பவுலினை சந்தித்துள்ளார். அப்போது, தனக்கு சொந்தமாக வீடு இல்லை என்று சொல்லியதால், அவருக்கு வீடு கட்டித் தர உறுதி அளித்து, கட்டுமான பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார், மனிதாபிமானமுள்ள அந்த துபாய் பெண்.
— ஜோல்னாபையன்

