PUBLISHED ON : செப் 23, 2012

பிரிட்டனின் எசெக்ஸ் என்ற பகுதியில் வசிக்கும் சாஷா கென்னடி, 26 என்ற பெண்ணுக்கு, ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளது. இவரால், அரை மணி நேரம் கூட, தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது. வீட்டை விட்டு, வெளியில் எங்கு சென்றாலும், தன்னுடன், பெரிய தண்ணீர் பாட்டிலை கொண்டு செல்வார். தினமும், சராசரியாக, 25 லிட்டர் தண்ணீர் குடிக்கிறார். இரவு நேரத்திலும், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து, லிட்டர் கணக்கில் தண்ணீரை குடிக்கிறார். அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால், தினமும், 40 முறை, பாத்ரூம் செல்ல வேண்டிய, தர்மசங்கடமான சூழலும், இவருக்கு உள்ளது.
இந்த வினோத பழக்கம், சாஷாவின் இரண்டாவது வயதிலேயே ஏற்பட்டு விட்டதாம். இரண்டு வயதில் இருந்து, இவர் குடிக்கும் தண்ணீரின் அளவு, படிப்படியாக அதிகரித்து, 13 வயதானபோது, தினமும், 15 லிட்டராக அதிகரித்தது. 20 வயதில், 20 லிட்டரானது. இப்போது, 25 லிட்டர். 'அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால், உடல் முழுவதும் வீங்கி, உயிருக்கே ஆபத்து ஏற்படும்...' என டாக்டர்கள் எச்சரித்தும் கூட, 'யார் எப்படி எச்சரித்தாலும், தண்ணீர் குடிப்பதை மட்டும், என்னால் நிறுத்த முடியாது. அரை மணி நேரத்துக்கு ஒருமுறை, தண்ணீர் குடிக்காவிட்டால், நாக்கு வறண்டு, உதடுகள் உலர்ந்து, உலகமே இருண்டு விட்டது போல், உணர்கிறேன். இந்த பழக்கத்தை நிறுத்துவதற்கு, ஏதாவது சிகிச்சை இருந்தால் சொல்லு<ங்கள்...' என, பரிதாபமாக கேட்கிறார்.
— ஜோல்னா பையன்.
