தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல.......

இதப்படிங்க முதல்ல.......

இதப்படிங்க முதல்ல.......


PUBLISHED ON : பிப் 09, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 09, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அஜீத்தின் சம்பளம் கிடுகிடு உயர்வு!

ஆரம்பம் படத்திற்கு பின், அஜீத்தின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. அதற்கு முன் வரை, விஜய், சூர்யா மாதிரியே சம்பளம் வாங்கி வந்தவர், இப்போது, தடாலடியாக,

25 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டார். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில், வசூலை குவித்து வரும் அவரது, வீரம் படம், தற்போது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் திரையிடப்பட்டு, அங்கு வெளியாகியுள்ள, ஹாலிவுட் படங்களுடன், நேரடி போட்டியில் குதித்திருப்பதால், அஜீத்தின் வியாபார வட்டம், விரிவடைந்துள்ளது. அதனால், அவர் நடிக்கும் புதிய படங்களில், அவரது படக் கூலி எகிறும் நிலை உருவாகியுள்ளது.

சினிமா பொன்னையா.

தமன்னாவை டீலில் விட்ட படாதிபதிகள்!

வீரம் படத்தில் நடித்தபோது, எக்குத்தப்பாக சம்பளம் கேட்டதால், தமன்னாவை, 'புக்' செய்யச் சென்ற சில படாதிபதிகள், பின்வாங்கி விட்டனர். வீரம் படத்தின், வெற்றிக்கு பின், இவர்கள் திரும்பி வருவர் என்று நினைத்திருந்த தமன்னாவுக்கு, ஏமாற்றமே கிடைத்துள்ளது. காரணம், அவர் நினைத்தது போலவே, படம் ஹிட்டான போதும், ஒரு புதிய படம் கூட, தமன்னாவுக்கு கிடைக்கவில்லை. அதனால், மறுபடியும் இந்தி, தெலுங்கு என்று சென்று விட்ட தமன்னா, சம்பள விஷயத்தில் இறங்கி வரலாமா, வேண்டாமா என்று பலமான யோசனையில் இருக்கிறார். நடவாத காரியத்தில் பிடிவாதம் பிடிக்கிறது!

எலீசா

ஆர்யா - நயன்தாரா நட்பில் விரிசல்!

ஆர்யாவுடன் அட்டையாக ஒட்டிக் கொண்டு திரிந்த போது, உடன் நடிக்கும் மற்ற ஹீரோக்களை, ஏறெடுத்து பார்க்காமல் இருந்தார் நயன்தாரா. இப்போது, தனக்கு பெண் பார்த்து வரும் நேரத்தில், நயனுடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்தால், யாரும் பெண் தர மாட்டார்கள் என்று, நினைத்து நயன்தாராவுடன் கடலை போடுவதை குறைத்துக் கொண்டார் ஆர்யா. இதனால், இப்போது உடன் நடிக்கும் ஹீரோக்களை அரவணைத்துச் செல்லத் துவங்கி விட்டார் நயன். நயனின் இந்த புதிய நட்பினால் உருகிக் கிடக்கின்றனர் சில இளவட்டங்கள். வேளைக்கு ஓர் உறவு; ஆளுக்கு ஒரு மரபு!

எலீசா

பாலிவுட்டில் மோதும் கோலிவுட் டைரக்டர்கள்!

கோலிவுட்டின் நடிகரும், டைரக்டருமான பிரபுதேவா, தற்போது, ஆக் ஷன் ஜாக்சன் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதேபோல், கோலிவுட்டின் முன்னணி இயக்குனரான,

ஏ.ஆர்.முருகதாஸ், ஹாலிடே என்ற படத்தை, இந்தியில் இயக்கி வருகிறார். இவ்விரு படங்களுமே, வரும் ஜூன் மாதம் 6ம் தேதி திரைக்கு வருகின்றன. பாலிவுட்டில், கோலிவுட் இயக்குனர்களின் படங்கள், ஒரே நாளில் வெளியாவது இதுவே முதல்முறை. மேலும், பிரபுதேவா, முருகதாஸ் இருவரும், தங்களது படங்களின் பப்ளிசிட்டிகளையும், வித்தியாசமான முறையில் செய்து, ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்க திட்டமிட்டுள்ளனர்.

சினிமா பொன்னையா.

கறுப்பு பூனை!

* டில்லியில் ஆட்சி அமைத்துள்ள, ஆம் ஆத்மி கட்சியினர், இந்தியா முழுக்க காலூன்றும் முயற்சியாக, சில பிரபல நடிகர், நடிகைகளையும் கட்சிக்குள் இழுத்து வருகின்றனர். இதில், கோலிவுட்டைச் சேர்ந்த தளபதி, புரட்சி தளபதி போன்ற நடிகர்களுக்கும், அக்கட்சியினர் தூண்டில் போட்டனர். ஆனால், நடிகர்கள் நழுவி விட்டனர். அதையடுத்து, தற்போது அரசியல் ஆர்வமுள்ள சில முதிர்ச்சியான நடிகர்களுக்கு, அக்கட்சி கல்லெறிந்து வருகிறது. அதில், இரண்டு 'பா' வரிசை டைரக்டர்கள் கம் நடிகர்கள் சிக்கியுள்ளனர்.

* 'தல'யுடன் நடித்து விட்ட, நான்கெழுத்து நடிகைக்கு, அடுத்தபடியாக, எதிர்பார்த்தபடி புதிய படங்கள் கை சேரவில்லை. அதனால், ஒரு காலத்தில், தன்னை அரவணைத்த, 'பருத்தி வீரன்' நடிகரை, மீண்டும், 'அட்டாக்' செய்து வருகிறார் நடிகை. அவருக்கும், 'இவர் தன்னை விட்டு பிரிந்த பிறகு, எந்த படமும், 'ஹிட்'டாகவில்லை என்பதால், மீண்டும் நடிகையுடன் ஐக்கியமாகி, வெற்றிக் கூட்டணியை அமைக்க, சில, திரைமறைவு வேலைகளை செய்து வருகிறார். இதையடுத்து, சமீபத்தில், நடிகருக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்து, மீண்டும், அவர் மனதில் குடியேறியுள்ளார் அம்மணி.

* ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும், வாள் படத்தின் படப்பிடிப்பை கோல்கட்டாவில் துவங்க உள்ளனர்.

* மலையாளத்தில் மோகன்லால் நடித்த, திருஷ்யம் படத்தின் தமிழ் ரீ-மேக்கில், விக்ரமை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us