PUBLISHED ON : ஜூலை 19, 2020

ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்தவர், ராபின் லிச்சென், 31. அவரது காதல் மனைவி, சுதித் செனைடர். இவர்களிடம், காசுக்கு பஞ்சம் இல்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் நன்றாக அனுபவித்து வாழ வேண்டும் என்பது, இவர்களது கொள்கை.
மிக பிரபலமான, 'ஹாலிவுட்' படங்களில், காதலர்கள் தோன்றும் காட்சிகள் எடுக்கப்பட்ட இடங்களுக்கு செல்வர். அதே இடத்தில், அதில் நடித்திருந்த நடிகர்கள் அணிந்திருக்கும் அதேபோன்ற உடையை அணிந்து, புகைப்படம் எடுப்பது தான், இவர்களின் பொழுது போக்கு.
இதற்காக, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா முழுதும் சென்று, விதம் விதமாக புகைப்படம் எடுத்துள்ளனர். இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களை, சம்பந்தப்பட்ட படங்களில் நடித்த நடிகர்கள் மற்றும் அதை இயக்கிய இயக்குனர்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
இந்த, 'ரியல்' காதல் தம்பதியை பார்த்து, 'ரீல்' காதலர்களும், இயக்குனர்களும் ஆச்சரியப்படுகின்றனர்.
— ஜோல்னாபையன்