sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஜன., 30, காந்திஜி நினைவு தினம்

/

ஜன., 30, காந்திஜி நினைவு தினம்

ஜன., 30, காந்திஜி நினைவு தினம்

ஜன., 30, காந்திஜி நினைவு தினம்


PUBLISHED ON : ஜன 26, 2020

Google News

PUBLISHED ON : ஜன 26, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதன் முதலில், காந்திஜியை, 'தேசத் தந்தை' என்று, அழைத்தவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

* காந்திஜியை, மகாத்மா என்று அழைத்தவர், ரவீந்திரநாத் தாகூர்

* தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் வைத்த பெயர், ஹரிஜன். இதன் பொருள், 'கடவுளின் குழந்தை' என்பதாகும்

* 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின்போது, காந்திஜி சொன்ன வாக்கியம், 'செய் அல்லது செத்து மடி'

* யாருக்கு கடிதம் எழுதினாலும், 'தங்களின் கீழ்படிந்த சேவகன்' என்று எழுதியே கடிதத்தை முடிப்பார், காந்திஜி

* 'என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு' என்று, காந்திஜி அழைத்தது, வினோபாபாவேவை தான்

* ராட்டை சக்கரத்துக்கு முன், காந்திஜி அமர்ந்து இருப்பதுபோல இருக்கும் புகழ்பெற்ற புகைப்படம், மார்கேட் பூர்க் ஒயிட் என்பவரால், 'லைப்' ஆங்கில இதழுக்காக எடுக்கப்பட்டது

* மார்டின் லுாதர் கிங், தலாய் லாமா, ஆங்சான் சூகி, நெல்சன் மண்டேலா மற்றும் அடால் போ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலக தலைவர்கள், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றதற்கு காரணம், காந்திஜி வழியை பின்பற்றியது தான் என்று, ஒப்புதல் அளித்திருக்கின்றனர்

* இந்தியாவிற்கு வெளியே முதன் முதலில், காந்திஜி தபால் தலை வெளியிட்ட நாடு, அமெரிக்கா. அது மட்டுமின்றி, தன் வாழ்நாளில் அவர், கால் மிதிக்காத நாடும், அமெரிக்கா தான்

* காந்திஜி துவங்கிய, இந்தியன் ஒப்பினியன் இதழ், குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் என, நான்கு மொழிகளில் வெளியானது

* போர்பந்தரில் பிறந்த காந்திஜி ஆரம்பித்த, சபர்மதி ஆசிரமத்தின் நினைவாக தான், 'சபர்மதி எக்ஸ்பிரஸ்' ரயில் விடப்பட்டது

* ஒவ்வொரு இரவும், நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டவராக இருந்தார், காந்திஜி. பின்னாளில் அவரின் சுய சரிதையாகவும் அது மலர்ந்தது.

- மு.க.இப்ராஹிம்.






      Dinamalar
      Follow us