PUBLISHED ON : செப் 11, 2016

அ நிறம் | அளவு
பிரபல நகைக்கடை அதிபர் ஜாய் ஆலுக்காஸ்; இவருக்கு, கேரள மாநிலம், திருச்சூர் சோபா நகரில், 52 ஆயிரம் சதுர அடியில், ஒரு வீடு உள்ளது. இதன் மேல்தளம், 25 ஆயிரம் சதுர அடி; இதில், 11,500 சதுர அடி மற்றும் 8,500 சதுர அடி என இரு பிரிவாக பிரித்து, இரண்டு ஷெட்டுகளை அமைத்து, அதில், இயற்கை உரங்களை பயன்படுத்தி, விதவிதமான காய்கறிகளை பயிரிட்டு வருகிறார்.
மாதத்தில், 10 நாட்கள் மட்டுமே குடும்பத்தினருடன் இங்கு வந்து தங்கி செல்லும் ஜாய், இங்கு விளையும் காய்கறிகளை, ஆதரவற்ற விடுதிகளுக்கு, இலவசமாக அளிக்கிறார். அதுமட்டுமின்றி, தன் வருமானத்தில் இருந்து கணிசமான தொகையை, ஏழைகளுக்காக உதவி செய்தும் வருகிறார்.
— ஜோல்னாபையன்.
