sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உழைப்பின் உன்னதம்!

/

உழைப்பின் உன்னதம்!

உழைப்பின் உன்னதம்!

உழைப்பின் உன்னதம்!


PUBLISHED ON : செப் 20, 2015

Google News

PUBLISHED ON : செப் 20, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விரதங்களிலேயே மிக உயர்ந்தது ஏகாதசி விரதம். இவ்விரதத்தின் சிறப்பையும், உழைப்பின் மேன்மையையும் செல்வந்தர் ஒருவருக்கு விளக்கிய வரலாறு இது:

கடந்த, 75 ஆண்டுகளுக்கு முன், ஜாம் நகர் பகுதியில், ஐவான்சிங் என்ற செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஆறு கிராமங்கள் சொந்தமாக இருந்தன.

அன்று, ஏகாதசி; விரதம் அனுஷ்டித்திருந்த செல்வந்தர், குதிரை வண்டியில் வெளியே சென்று, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் திடீரென, குதிரை வண்டியின் சக்கரம் ஒன்று, உடைந்து விட்டது.

வண்டியை தானே ஓட்டிக் சென்றதால், உதவிக்கு ஆள் இல்லாமல் வண்டியை இழுத்தபடி, பக்கத்து கிராமத்தில் இருந்த கொல்லன் பட்டறைக்கு சென்றார்.

அங்கே, பட்டறைக்காரர் மட்டுமே இருந்தார்; பணியாளர்கள் யாருமில்லை. அதனால், 'ஐயா... இன்று ஏகாதசி என்பதால், பட்டறையில் உள்ள தொழிலாளிகள், வேலைக்கு வரவில்லை. அதனால், துருத்தி போட ஆட்கள் இல்லை. நீங்க கொஞ்ச நேரம் துருத்தி போட்டீங்கன்னா, உங்க வண்டி சக்கரத்தை சரி செய்து குடுத்துடுவேன்...' என்றார் பட்டறைக்காரர்.

இதைக் கேட்டதும் செல்வந்தர் திகைத்தார். காரணம், அவர், அதுவரை உடல் உழைப்பு எதையும் செய்ததில்லை. வேறு வழியில்லாமல் சம்மதித்து, துருத்தி போட்டார். வியர்த்து கொட்டியது. அதை, மேலாடையால் துடைத்தபடி, வலது கை, இடது கை என, மாற்றி மாற்றி துருத்தி போட்டார். பழக்கம் இல்லாத வேலை என்பதால், செல்வந்தருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அத்துடன் அன்று ஏகாதசி விரதம் இருந்ததால், விரைவில் சோர்ந்து விட்டார். ஆனாலும், அவர் முகத்தில் ஒரு சந்தோஷம்.

சக்கரம் சரி செய்யப்பட்டு, வண்டியில் பூட்டப்பட்டது. 'சமயத்தில் உதவி செய்தாய்; இதற்கு, நான், உனக்கு எவ்வளவு பணம் தர வேண்டும்?' எனக் கேட்டார் செல்வந்தர்.

அதற்கு பட்டறைக்காரர், 'ஐயா... சாதாரணமாக இந்த வேலைக்கு, ஆறு வெள்ளிப் பணம் வாங்குவேன். ஆனால், நீங்களும் துருத்தி போட்டு வேலை செய்ததால், அஞ்சு வெள்ளிப் பணம் கொடுத்தால் போதும்...' என்றார்.

செல்வந்தர், ஆறு தங்கக் காசுகளை எடுத்து நீட்டியதும், பட்டறைக்காரர் ஆச்சரியப்பட்டார்.

'அப்பா... இது உனக்கான கூலியல்ல; குருதட்சணை. உடல் உழைப்பில் எத்தனை சுகம் இருக்கிறதென்று உன்னால் தான், இப்போது தெரிந்து கொண்டேன். அதற்கான குருதட்சணை தான் இது...' என்று, பட்டறைக்காரரின் கைகளில் காசுகளை வைத்தார்.

அறிவின் உழைப்பால் அகிலம் உயரும்; உடல் உழைப்பால் ஆரோக்கியம் வளரும்!

பி.என்.பரசுராமன்

திருமந்திரம்!

தாம் இடர்பட்டுத் தளிர் போல் தயங்கினும்

மாமனத்து அங்கு அன்பு வைத்து இலையாகும்

நீ இடர்பட்டு இருந்து என் செய்வாய் நெஞ்சமே

போம் இடத்து என்னொடும் போது கண்டாயே!

விளக்கம்:
மனதே... கொழு கொம்பு இல்லாத மெல்லிய கொடியைப் போல நீ வாடினாலும் சரி, உன் விருப்பப்படியெல்லாம் ஆட மாட்டேன். நீ தனியாக இருந்து, ஏன் துன்பப்படுகிறாய்... என்னுடன் வா இறைவனை தரிசித்து, இறையருளை அடையலாம்.

கருத்து: மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்.






      Dinamalar
      Follow us