PUBLISHED ON : நவ 20, 2016

அ நிறம் | அளவு
கேரளாவில், தெரு நாய்களின், தொல்லை அதிகரித்து வருவதால், அவற்றை கொல்ல முடிவெடுத்தது, அம்மாநில அரசு. ஆனால், 'நாய்களை கொல்லக் கூடாது; அவ்வாறு கொன்றால், தண்டிக்கப்படுவர்...' என்று, எச்சரித்து வருகிறார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி.
இந்நிலையில், 'மனிதர்களுக்கு உபத்திரவம் செய்யும் குரங்குகளை கொன்று விடுங்கள். அப்படி ஒரு குரங்கை கொன்று விட்டால், 300 ரூபாய் சன்மானம் வழங்கப்படும்...' என்று இமாசல பிரதேச, வன இலாகா அமைச்சர், டாகூர் சிங் அறிவித்து இருக்கிறார்.
இமாசல பிரதேசத்தில், பல இடங்களில், வீடுகளில் குரங்குகள் புகுந்து, பொருட்களை களவாடுவதுடன், மனிதர்களையும் காயப்படுத்துகின்றன.
— ஜோல்னாபையன்.
