
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலிவுட் நடிகை கத்ரீனா, இரு விஷயங்களுக்காக வருத்தத்தில் உள்ளார். உலகப் புகழ்பெற்ற நடிகரான, ஜாக்கிசானின் புது படமான, குங்பூயோகா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பல இந்தி படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்ததால், 'கால்ஷீட்' பிரச்னையால், ஜாக்கி சானுடன் நடிக்க முடியவில்லை. அதேபோன்று, ரஜினியுடன், எந்திரன் ௨ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால், 'நல்ல வாய்ப்பை எல்லாம் இழந்து விட்டேனே...' என்று, சோகத்தில் உள்ளார்.
— ஜோல்னா பையன்.