PUBLISHED ON : அக் 25, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிரிக்கெட் போட்டியில் விளையாட கொச்சிக்கு வரும்போது எல்லாம், இங்கு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை, சச்சின் டெண்டுல்கர் மனதில் இருந்தது. சமீபத்தில், கொச்சி காயல் கரையில், வீடு வாங்கி, தன் ஆசையை நிறைவேற்றியுள்ளார் சச்சின். 5,000 சதுர அடியில், மூன்று மாடி கொண்ட இந்த வீட்டில், நான்கு படுக்கை அறைகள் உள்ளன. இத்துடன், அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. 'கேரளாவில், வீடு வாங்குவது என் கனவாக இருந்தது; அது, இப்போது நிறைவேறி விட்டது...' என்கிறார் சச்சின்.
— ஜோல்னா பையன்.