தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - இப்போது துவங்கினாலும்...

கவிதைச்சோலை - இப்போது துவங்கினாலும்...

கவிதைச்சோலை - இப்போது துவங்கினாலும்...


PUBLISHED ON : அக் 01, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொறுமையாக சென்றாலும் கூட

உண்மையே வெற்றி பெறும்!

உங்களுக்கான அடையாளம்நீங்கள் நீங்களாகவே

இருப்பது தான்...

உங்களுக்கான முத்திரை

நீங்கள் செய்யும்

நல்ல செயல்களே!

செதுக்குங்கள்

அறிவைப் பயன்படுத்தி

வாழ்க்கைக்கான

திட்டங்களையும்...

உழைப்பை பயன்படுத்தி

வாழ்க்கையையும்!

முயற்சி செய்துதோல்வியடைந்தாலும்

வெற்றி தான்!

பயணிப்பதற்காகவே பாதைகள்

பார்த்துக் கொண்டே

இருப்பதற்காக அல்ல!

முயற்சியோ, திட்டமோ

நல்லதாக இருப்பின்

என்றுமே தோல்வியடையாது!

திட்டங்களோ, செயல்களோ

மற்றவர்களுக்கும்

பயனுள்ளதாக இருப்பின்

அவை உங்கள் வாழ்வை

நிமிரச் செய்யும்!

கடந்த நாட்களை எண்ணி

கவலை கொள்வதில்

பயன் ஏதும் இல்லை

இருக்கும் நாட்கள் எல்லாம்

உங்களுக்கானவையே!

எதுவும் கை மீறிப்

போய் விடவில்லை

முயற்சிகளை இப்போது

துவங்கினாலும்

விரைவில் வெற்றி

உங்கள் கைகளில் தவழும்!

— மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி, கடலுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us