தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - சொர்க்கமும் நரகமும் நம்மிடமே!

கவிதைச்சோலை - சொர்க்கமும் நரகமும் நம்மிடமே!

கவிதைச்சோலை - சொர்க்கமும் நரகமும் நம்மிடமே!


PUBLISHED ON : அக் 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி

மறுபடியும் அதே தவறுகளை

செய்ய விடாமல்

நல்ல பாடங்களையும்

அனுபவத்தையும் கற்றுக் கொடுத்து

அடுத்த வெற்றிப் பாதைக்கு

வழி காட்டும் ஆசானாய் வரும்

தோல்வியே வா!

பிறர் கேவலமாக பேசி

மட்டம் தட்டி ஒதுக்கிய நிலையில்

வைராக்கியம் கொடுத்து எழுந்து தன்னம்பிக்கையாய்

வாழ வழி செய்த அவமானமே வா!

எனக்குள்ளிருக்கும்

குறைகளையும், குற்றங்களையும்

புதைந்திருக்கும் திறமைகளையும்

வெளிக் கொண்டு வந்த

எதிரியே வா!

பிரச்னைகளைக் கண்டு

பின் வாங்கிய என்னை

எதையும் சாதிக்கவும்

சமாளிக்கவும் முடியும் என்று

தன்னம்பிக்கையையும்

தைரியத்தையும்

கொடுத்த சவாலே வா!

உளி தரும் வலியால்

கல் சிலையாகிறது

நெருப்பில் சுட்டத் தங்கம்

புதுப் பொலிவாய் ஜொலிக்கிறது!

தோண்டி சிதைக்கப்பட்ட மண்விளை நிலமாகிறது

முள் செடியிலே ரோஜா மலர்கிறது...

துன்பங்களால் மனம் உறுதியாக்கப்படுகிறது

பிரச்னைகள்

சாதனை படைக்கத் துாண்டுகிறது!

— எம். பாலகிருஷ்ணன், பசுமலை, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us