/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை! - இந்தியா... ஓர் தாய்நாடு!
/
கவிதைச்சோலை! - இந்தியா... ஓர் தாய்நாடு!
PUBLISHED ON : ஜன 24, 2021

மிகப்பெரிய அமைதி
நம் மனதிற்குள் உள்ளது
ஆனால், மிகச்சிறிய போரால்
தோற்கடிக்கப்படுகிறோம்!
மிகப்பெரிய நம்பிக்கை
நம் மனதிற்குள் உள்ளது
ஆனால், மிகச்சிறிய அவநம்பிக்கையால்
தோல்வி அடைகிறோம்!
மிகப்பெரிய அன்பு
நம் மனதிலே உண்டு
ஆனால், மிகச்சிறிய பகையால்
பிரிவுகள் ஏற்படுகிறது!
மிகப்பெரிய மன்னிப்பு
நம் மனதிலே ஓடுகிறது
ஆனால், மிகச்சிறிய வன்மத்தால்
ரணமாக்கப்படுகிறோம்!
மிகப்பெரிய வலிமை
நம் மனதிற்குள் உள்ளது
ஆனால், மிகச்சிறிய துரோகத்தால்
வீழ்த்தப்படுகிறோம்!
மிகப்பெரிய அரவணைப்பு
நம் எல்லாரிடமும் உண்டு
ஆனால், மிகச்சிறிய பிரிவினையால்
இழக்கப்படுகிறோம்!
மிகப்பெரிய நட்பு
நம் வாழ்வை அலங்கரிக்கிறது
ஆனால், மிகச்சிறிய கூடா நட்பால்
கேடாய் முடிகிறது!
மிகப்பெரிய பொது நலம்
நம் எல்லாரிடமும் உண்டு
ஆனால், மிகச்சிறிய சுயநலத்தால்
பெரிதும் பாதிக்கப்படுகிறோம்!
மிகப்பெரிய நீதி
நம் நாட்டில் உள்ளது
ஆனால், மிகச்சிறிய அநீதியால்
நிர்மூலமாக்கப்படுகிறோம்!
மிகப்பெரிய ஜனநாயக நாடாக
இந்தியா உள்ளது
அதனால், உலகிற்கே தாய்நாடாய்
நாம் உருவாக்குவோம்!
கோ. சந்திரன், சென்னை.