தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - தாயானவன்!

கவிதைச்சோலை - தாயானவன்!

கவிதைச்சோலை - தாயானவன்!


PUBLISHED ON : அக் 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்., 17 - கண்ணதாசன் நினைவு நாள்

கவியரசர் கண்ணதாசன்

பிறந்தபோது

தமிழ் தன், 247 எழுத்துக்களுடன்

அணிவகுத்து

அர்த்தத் தட்டில் அவனுக்கு

ஆரத்தி எடுத்தது!

கடல் கொஞ்சம் இடம்மாறி

அவன் கற்பனைக்குள்ளும்

குடி புகுந்தன!

இலக்கியங்கள்தன்னை

எளிமையாக்கி

இவனை துாக்கி

தாலாட்டு பாடின!

தத்துவம்

இவன் மேல்

காதல் கொண்டது!

காதல்

இவனிடம்

மோகம் கொண்டது!

சோகம்

இவனிடம் தான்

தன்னை மறந்து

சிரித்து இளைப்பாறியது!

தாயின் வயிற்றில்

ஒருமுறை பிறந்தான்...

பிறகு கவிதையைசுமக்கும் போதெல்லாம்

ஒவ்வொரு முறையும்

இவனும் தாயானான்!

ந. வீரா, திமிரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us